வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் STR 49 திரைப்படம் குறித்த பல தகவல்கள் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் தற்போது இழுபறியில் சிக்கி உள்ளது.
வெற்றிமாறன் சிறந்த இயக்குனராக பெயர் பெற்றவரே. ஆனால் முழுமையான கதையை எழுதி முடித்து விட்டு படப்பிடிப்பை தொடங்கும் பழக்கம் அவருக்கு இல்லை என்பது திரைப்படத் துறையிலேயே அறிந்த விஷயம். இதே காரணத்தினால்தான், விடுதலை திரைப்படம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் சேர்த்து மூன்று ஆண்டுகள் எடுத்தது. இதே பாணி தான் அவரை வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்க முடியாமல் வைத்திருக்கிறது.
‘முழுக்க கதையை சொல்லுங்கள்.. கால்ஷீட் கொடுக்கிறேன்’ என்ற சூர்யா, அதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருப்பதால், வாடிவாசல் இன்னும் துவங்கவில்லை என்பது உறுதியான தகவல். இதனால், வெற்றிமாறன், சிம்புவை வைத்து வடசென்னை சார்ந்த ஒரு புதிய கதையை உருவாக்க முயற்சித்தார்.
STR 49 படத்திற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு செட் பணிகளை ஆரம்பித்தார். ஆனால், இப்போதும் படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. இதற்கிடையில், படத்தின் முன்னேற்பாடுகளுக்காகவே 20 கோடி ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, சிம்புவுக்கான சம்பளமாக 40 கோடி, வெற்றிமாறனுக்காக 20 கோடி, பிற செலவுகளுடன் படம் 140 கோடி ரூபாய் வரை செலவாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்த கணக்குகளை பார்த்த தாணு, இத்தகைய பெரிய பட்ஜெட்டில் சிம்புவின் வியாபாரத் திறனை வைத்துப் பார்க்கையில், திட்டம் நிதியளவில் சாத்தியமற்றதாக இருப்பதாக கருதி, படத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிம்பு சமீபத்தில் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு, “செட்டுக்குத்தானே அதிக செலவு. நேரடியாக லொகேஷனில் போய் ஷூட் பண்ணலாம்” என ஆலோசனை வழங்கியுள்ளார். வெற்றிமாறனும் இதை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தக் கதைக்கு தேவையான சூழ்நிலைகள் செட்டில்தான் உருவாக்கப்படவேண்டியதாக இருப்பதால், லொகேஷன் ஷூட்டிங் சாத்தியமற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Listen News!