• Jan 19 2025

விஜய்யை ஓரங்கட்டிய எதிர்நீச்சல் சீரியல்! இனி எங்களுக்கு தான் மவுசு? ஃபேன்ஸ் பட்டாளத்தை பார்த்தீர்களா? ஷாக் வீடியோ உள்ளே

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

ஆண் ஆதிக்கம் உள்ள வீட்டில் வாழும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்படியான துன்பங்களை சந்திக்கின்றார்கள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில், மாரிமுத்து மறைவுக்கு பின் சற்று TRPல் தட்டுத்தடுமாறியது.

மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.


தற்போது தர்ஷினி கடத்தப்பட்ட விவகாரத்தில் பெண்கள் சிங்கப்பெண்கள் ஆக துணிந்து, தாமே முடிவெடுத்து ஒரு கரையைக் கண்ட நிலையில், மறுபக்கம் ஆதிக் குணசேகரனை எதிர்க்க அவரது சகோதரர்கள் துணிந்து விட்டார்கள்.


இவ்வாறு ஒருவழியாக தற்போது தான் எதிர்நீச்சல் சீரியல் சூடு பிடித்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களும் அடுத்தடுத்த திருப்பங்களும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் தமது ரசிகர்களை காட்டி, எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.





Advertisement

Advertisement