• Apr 26 2024

அடேங்கப்பா!!....தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய்யின் திரைப்படம் எது தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் எது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் திரையரங்கில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் கில்லி தானாம். ஆம், இப்படம் வெளிவந்த சமயத்தில் சுமார் 1.25 கோடி மக்கள் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.

அதே போல் திருப்பாச்சி திரைப்படத்தை 1.05 கோடி மக்கள் தமிழ்நாட்டில் திரையரங்கில் பார்த்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.இதற்கு அடுத்தடுத்த இடங்களில் துப்பாக்கி 1 கோடி மக்கள், போக்கிரி 97 லட்சம் மக்கள், பிகில் மற்றும் சிவகாசி 92 லட்சம் மக்கள், வாரிசு, மெர்சல், சர்கார் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் 90 லட்சம் மக்கள் பார்த்திருப்பார்கள் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement