• Mar 29 2023

'சூர்யா 42' படத்தின் டைட்டில் டீசர் எப்போ தெரியுமா? வெளியானது வேற லெவல் அப்டேட்!!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . சூர்யா இந்த படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 13 மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சரித்திர கதை அம்சம் கொண்ட காட்சிகள் இடம்பெற இருப்பதாகவும் அதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படம் 13 மொழிகளில் வெளியாக இருப்பதால் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒரு டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி சூர்யா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 


தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement