• Jan 18 2025

தெலுங்கானா மக்களுக்கு நன்றி..!சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி பேட்டி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை மிகவும் இழிவுபடுத்தி பேசியதன் காரணமாக ஹைதராபாத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர் ஊடகங்களிற்கு பேட்டி வழங்கியுள்ளார்.

குறித்த பேட்டியின் போது "அரசியல் வித்தியாசங்களை பாராமல், எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு எனது எள்ளாமலான நன்றி. அதேசமயம், எனக்கு முழு ஆதரவை அளித்த ஆந்திர மற்றும் தெலங்கானா மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன் மற்றும் சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

தன்னைச் சுற்றியுள்ள நிலைமைகள் மற்றும் இந்த அனுபவம் தனது வாழ்வில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். "இந்த அனுபவம் எனக்கு புதிய பாடங்கள் கற்றுக்கொடுத்துள்ளது. மக்களின் நம்பிக்கையை மரியாதையாக ஏற்றுக்கொள்கிறேன்," என்றார்.

கஸ்தூரியின் வெளிவருதலுக்கு அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இப்போது அவரது பேட்டி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Advertisement

Advertisement