• Jan 19 2025

நன்றிகெட்ட ஈஸ்வரி... ராதிகாவுக்கு பலத்த சப்போர்ட்! பழனிச்சாமி கொடுத்த ஷாக்! நஷ்டத்தில் பாக்கியா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் முதல் நாள் கலெக்சன் நஷ்டத்தில் காணப்படுகிறது. செல்வியும், அமிர்தாவும் என்ன செய்வதென்று கேட்க, இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பார்த்துட்டு ஏதாவது செய்வோம் என பாக்கியா நம்பிக்கை கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டிற்கு பாக்கியா இரண்டு, மூன்று தடவை கால் பண்ணவும் யாரும் ஆன்சர் பண்ணவில்லை. இதை பார்த்த ராதிகா, போன் எடுத்து மாமா குளிக்கிறார், என்ன விஷயம் என கேட்க, மாமா, மாமிக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என சொல்ல, நான் பார்க்கிறேன் என ராதிகா சொல்கிறார்.

இதை அடுத்து ஈஸ்வரியையும் ராமமூர்த்தியையும் அழைத்து சாப்பாடு போட்டு கொடுக்கிறார். இதன்போது ஈஸ்வரி ராதிகாவிடம் உன் பிள்ளை என்ன செய்றா, உனக்கு அண்ணன் இருக்கா என்று பக்குவமாக விசாரிக்கிறார்.


மறுபக்கம் ரெஸ்டாரண்டில் செல்வி, ஈஸ்வரியம்மா ரொம்ப மாறிட்டாங்க. அவங்க ராதிகாவுக்கு சப்போர்ட் பண்றாங்க. கோபி சார் கிச்சன் ஆரம்பிக்கிறது சம்பந்தமா எதுவுமே கேட்கல. ஆனா நீ ஆரம்பிக்கும் போது எத்தனை கேள்வி கேட்டாங்க என சொல்கிறார். அதற்கு பாக்கியா, நம்மட பிரச்சினையை நாம பார்ப்போம். அவங்க நல்லா இருந்தா நமக்கு போதும் என்ற மாதிரி சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு பழனிச்சாமி வருகிறார். அங்கு அவர் எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு பாக்கியவுடன் கதைத்துக் கொண்டிருக்க, பாக்கியாவின் வேலையாட்கள் அவர்களின் ஜோடி சூப்பரென பேசிக் கொண்டிருக்கிறார்கள். செல்வியும் பாக்கியா செய்ததாக சொல்லி ஸ்வீட்சை அவருக்கு கொடுக்கிறார்.

இதை அடுத்து பாக்கியா வீட்டிற்கு செல்ல, அங்கு மையூ வாசலில் நிற்கிறார். அதை பார்த்து பாக்கியா ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்க, அம்மாவுக்கு கால் பண்ணினான் அவங்க ஆன்சர் பண்ணல. கடைக்கு போக வந்தன் என சொல்ல, சரி நான் உன்ன கூட்டி போறேன் என பாக்கியா அவரை அழைத்துப் போகிறார்.

அதன் பின்பு பாக்கியா மையூவை வீட்டுக்கு கூட்டி போக, அங்கு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து மையூ நான் வீட்டிற்கு போவதாக சொல்ல, ஈஸ்வரி அவர்களை பார்த்து விடுகிறார். இதுதான் இன்றைய எபிசோடு .

Advertisement

Advertisement