பிரபல நடிகர் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டில் ஜோசன் சஞ்செய் குறித்து இசையமைப்பாளர் தமன் பேசிய விடயம் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். இவரின் மகன் தான் இளம் இயக்குநர் ஜோசன் சஞ்செய். விஜய் தற்போது அரசியலுக்கு சென்று விட்டார். இவரின் மகன் ஹீரோவாக சினிமாவிற்குள் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இயக்குநராக என்றிகொடுத்துள்ளார். இந்நிலையில் லைகா நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அதிவித்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டில் சஞ்செய் குறித்து பேசிய இசையமைப்பாளர் தமன் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில் "ஜேசன் சஞ்சய்யை நினைத்து நான் இன்னமும் ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை. பொதுவாக பெரிய ஹீரோக்களின் மகன்கள் ஹீரோக்களாக ஆசைப்படுவார்கள். இசையமைப்பாளரின் மகன் இசையமைப்பாளர் ஆக ஆசைப்படுவார். ஆனால் இவர் எப்படி இயக்குநர் துறையை தேர்ந்தெடுத்து அதில் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறார் என்று தோன்றும். ஏனெனில் அவர் சொன்ன கதையை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் "ஜேசன் சஞ்சய் வைத்திருக்கும் கதைக்கு பெரிய ஹீரோக்களின் தேதிகள்கூட எளிதில் கிடைக்கும். ஆனால் சந்தீப் கிஷன் மட்டும்தான் இந்தக் கதைக்கு சரியாக வருவார் என்று உறுதியாக இருந்தார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் படக்குழு மொத்தமுமே தீர்க்கமாக இருக்கிறோம். விஜய்யின் மகன் என்ற கர்வம் துளிக்கூட ஜேசனிடம் இல்லை. அவ்வளவு எளிமையாக இருக்கிறார். விஜய்யின் மகன் என்பதை அவர் எங்கேயும் காட்டியதே இல்லை. அப்படத்துக்கு சிறப்பான இசையை கண்டிப்பாக கொடுப்பேன்" என்றும் கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன்.
Listen News!