பிரபல நடிகர் விஷால் மிகவும் மோசமான உடல் நிலையோடு மதகஜராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கலந்து கொண்டமையினால் தற்போது அனைவராலும் பேசப்படும் ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளார்.குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக தொகுப்பாளர் திவ்யதர்ஷினி விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் தான் பயப்பட தேவையில்லை என கூறி இருப்பினும் ரசிகர்கள் இப்போது வரை சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது விஷால் உடல் நிலை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இவர் மூன்று நாளைக்கு தொடர்ச்சியாக நித்திரை செய்து வருவதாகவும் மூன்று நாட்களின் பின்னரே இவர் நித்திரையை விட்டு எழும்புவதாகவும் இவ்வாறான பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
தற்போது விஷாலை குணப்படுத்துவதற்காக அவரது நண்பர்கள் பலரும் அவரை சந்தித்துள்ளதுடன் நேற்றைய தினம் மதிய உணவினை விஷால் நடிகர் ஆர்யாவின் ஹோட்டலில் எடுத்துள்ளதாகவும் விஷாலின் நண்பர்களில் முக்கியமாக அவர் குணமாவதில் தீவிர முயற்சியை ஆர்யா அவர்களும் எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!