• Jan 18 2025

தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம்..! நடிகை பாவனா சொன்ன எதிர்பாரா கருத்து..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பாவனா. இவர் தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று சென்னை விமானநிலையம் வந்த அவர் ரசிகர்களையும், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


தமிழ் திரைப்படத்தில் நடிப்பீர்களா என்று கேட்ட? அதற்கு அவர் "நான் மலையாளத்தில் தற்போது  2 படங்களில் நடித்து வருகிறேன் மேலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். தமிழில் சமீபகாலமாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. நல்ல படம் ஏதும் வந்தால் நிச்சியம் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 


அதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.  "ஆல் தி பெஸ்ட்' சொல்லிக்கொள்கிறேன், அவ்வளவுதான் எனக்கு அதை பற்றி அதிகம் தெரியாது' என்று கூறி சென்றுள்ளார்.


நடிகை பாவனா சினிமாவிற்கு சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்மைக்கு பாராட்டுகளும் பெற்றார். தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement