கடந்த சில நாட்களாகவே நடிகர் அஜித் ரசிகர்கள் அஜித்தே! கடவுளே என்று கோஷம் எழுப்பி கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து நடிகர் அஜித் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை குறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் அஜித் இந்த அறிக்கை வெளியிட இதுதான் காரணம் என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதன் அப்டேட்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் சமீபகாலமாகவே ரசிகர்கள் கடவுளே! அஜித்தே! என்று கோஷம் போட்டுகொண்டு இருக்கிறார்கள். இது இணையத்தில் வைரலாகவே நாடுகள் கடந்து அனைவரும் இந்த கோஷத்தை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் இவ்வாறு கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் கடவுளே அஜித்தே கோஷம் குறித்து வீடியோ ஒன்றை போட்டிருந்தேன். அது அவர் காதுகளுக்கு போய் விட்டது என்று நம்புகிறேன். அதன் பின்னர் அவர் செய்த இந்த செயல் என்னை அஜித்துக்கு தலைவணங்க வைக்கிறது. தற்போது ஆட்டு மந்தைகள் போல ரசிகர்களின் மீது அக்கறை இல்லாத நிலைமை இருக்கிறது. அப்படி அஜித் ரசிகர்களுக்கு ஆகிவிட கூடாது என அஜித் யோசித்ததால் கடவுளே என்று அழைக்க வேண்டாம் என்று இந்த அறிக்கையை வெளியிட்டார்.
கடந்த சில மாதங்களாக இந்த கோஷம் முக்கியமான பல இடங்களில் திடீரென ஒலிக்கிறது, அதனை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இப்படியான சூழலில் தான் இதனை கட்டாயம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வீடியோ போட்டேன். அதே போல அஜித்தும் அதிகார பூர்வமாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த விடையம் அவரின் மீது எனக்கு இன்னும் மரியாதையை கூட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அஜித் குமார் நேற்று மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் பொது இடங்களில் கடவுளே அஜித்தே கோஷங்கள் கூறுவது தனக்கு அசெளகரியமாக இருக்கிறது. ஆகையால் அதனை கூறுவதை தவிர்க்கவும் எனவும் அஜித் என்றே எனது ரசிகர்கள் அழைக்கலாம் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!