• Jul 27 2024

33 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் ஜோடி சேரும் ‘தளபதி’ நாயகி.. ‘தலைவர் 171’ வேற லெவல் தகவல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ திரைப்படத்தில் நடித்த நடிகை ’தலைவர் 171’ படத்தின் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் மாதம் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் ஏற்கனவே சில நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது நடிகை ஷோபனா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.



கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான ’தளபதி ’படத்தில் ரஜினியை காதலிப்பது போன்ற கதை இருந்தாலும் அதன் பின்னர் ரஜினியின் சகோதரர் அரவிந்த் சாமியை திருமணம் செய்து கொள்வது போல் கதை மாறிவிடும். இருப்பினும் இருவருக்கும் இடையே 'சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’ என்ற டூயட் பாடல் அந்த படத்தில் இருந்தது என்பதும் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ’தளபதி ’ நடிகை ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement