• Jan 19 2025

லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த டார்கெட்.. வீட்டு மொட்டை மாடியில் இப்படியொரு மேஜிக் ட்ரீமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழில் 'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, வல்லவன், ஈ, பில்லா, பில்லு, தனி ஒருவன், ஆதவன் போன்ற பல ஹிட் படங்களை பிரபல நடிகருடன்  கொடுத்திருந்தார்.

'நானும் ரவுடி தான்' திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழகத் தொடங்கி நயன்தாரா. அவரை ஆறு வருடங்களாக காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, தற்போது தன் மகன்களுடன் பல போஸ்ட்களை போட்டுத் தள்ளி வருகிறார்.

இதை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வரும் நயன்தாரா, மாயா, டோரா, கொலை உதிர் காலம், அன்னபூரணி போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. 


அதன் பின்பு பெண்களுக்காக அவர்கள் உபயோகப்படுத்தும் பியூட்டி பிசினஸிலும் இறங்கினார். இவ்வாறு படம் தயாரிப்பது, நடிப்பது, குழந்தைகளை பராமரிப்பது, பிசினஸ் என பல கோணங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது நயன்தாரா கட்டியுள்ள புதிய அலுவலகத்தின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி, தனது வீட்டின் மொட்டை மாடியில் புதிய ஆபிசுக்கானா கட்டுமான பணிகள் நடந்து வருவதை நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். 


GalleryGalleryGallery


Advertisement

Advertisement