• Mar 08 2026

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘தாய் கிழவி’ – மூன்றாம் நாளில் வசூல் வேட்டை தீவிரம்

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

புதுமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரின் முதல் படமா என கேட்கும் அளவுக்கு தரமாக இயக்கியிருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். 

இந்த படத்தில் பல கமல் ரெஃபரன்ஸ்களையும் சேர்த்துள்ளார் இயக்குநர் . குறிப்பாக சிங்கம்புலி கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.


தாய் கிழவி படத்தின் வசூல் விவரங்களின்படி, முதல் நாளில் ரூ.3 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் வசூலை இரட்டிப்பு செய்தது. சனிக்கிழமை உலகளவில் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்து, இரண்டே நாட்களில் ரூ.10 கோடி வசூலை கடந்தது.

இந்த நிலையில், தாய் கிழவி படத்தின் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக , இந்தியாவில் ரூ.6 கோடிக்கும், உலகளவில் ரூ.8 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

Advertisement

Advertisement