• Mar 08 2026

சரவணனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் மயில்.! மாஸ்டர் பிளான் போடும் மீனா அப்பா.!

shali / 6 days ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் மீனாவைப் பார்த்து வாந்தி மட்டும் நிக்கவே இல்ல என்கிறார். மேலும், தலை வேற சுத்துது என்கிறார். அதைக் கேட்ட மீனா வாங்க ஹாஸ்பிடல் போய்ட்டு வருவோம் என்கிறார். அதனை அடுத்து மயில் மீனாவைப் பார்த்து நான் உண்மையிலேயே மாசமா இருந்தால் எல்லாப் பிரச்சனையும் சரியாகிடும் என்று சொல்லுறார். அதுக்கு மீனாவும் ஆமா என்கிறார்.


மேலும், இதுக்கு அப்புறம் நான் கொஞ்சம் கூட பொய் சொல்லமாட்டேன் என்கிறார் மயில். அதனை அடுத்து மயிலை சோதித்து பார்த்த டாக்டர் மயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்லுறார். அதைக் கேட்டு ரெண்டு பேருமே சந்தோசப்படுகிறார்கள். பின் மயில் வீட்ட போய் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியம் சந்தோசப்படுறார்.

பின் மயிலை உடனே சரவணன் வீட்ட கிளம்ப சொல்லுறார். அதுக்கு மீனா கொஞ்சம் பொறுமையா இருங்க என்கிறார். அதைத் தொடர்ந்து மயில் தான் நேர்ல போய் சரவணன் கிட்ட சொல்லுறேன் அதுக்கப்புறம் வீட்ட சொல்லலாம் என்கிறார். மறுபக்கம் மீனாவோட அப்பா செந்திலைக் கூப்பிட்டு எப்ப வீடு வாங்கப் போறீங்க என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement