• Oct 09 2024

'தத்தி..தத்தி..' சானியா அத புரிஞ்சிகிட்டு சரியா நடிச்சாங்க! இறுகப்பற்று கிளைமேக்ஸ் இப்படிதான் உருவானது?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

'இறுகப்பற்று'  திரைப்படம் தற்போது திரைக்கு வந்ததன் பின்னர், அதற்கான வரவேற்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆண்-பெண் இருவருக்கும் இடையிலான காதல், திருமண வாழ்க்கை என்பவற்றை தத்துரூபமாக சித்தரித்து காட்டியுள்ளது இந்த படம். மேலும், குறித்த படத்தில் மூன்று தம்பதிகளும் சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை எதார்த்தம் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம்  'இறுகப்பற்று'. காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு குறைந்து போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் இறுகப்பற்று.


'அதிலும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியா இருக்கிறதே பெரிய காரணம் தான் ' என்ற வசனம் இந்த படத்துல ஹைலையிட்டா இருக்கு. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் கணவன், மனைவி  பிரச்சனை குறித்து இப்படம் பேசுகிறது.

தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைக்கு  தீர்வு சொல்பவராக இருக்கும் ஷ்ரத்தாவிடம் விதார்த்-அபர்னதி, ஸ்ரீ-சானியா ஜோடி கவுன்சிலிங் பெற வருகின்றனர். அதில் விதார்த் தன் மனைவி குண்டாக இருக்கிறார், வாய் துர்நாற்றம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளை சொல்லி விவாகரத்து கேட்கிறார்.


அதே போன்று ஸ்ரீ தன் மனைவி தன்னிடம் காதலோடு இருப்பதில்லை என்ற பிரச்சனையை சொல்கிறார். இதற்கெல்லாம் ஆலோசனை சொல்லும் ஷ்ரத்தா தன் கணவர் விக்ரம் பிரபு உடன் சண்டையே போடாமல் வாழ்கிறார். இதுவே அவர்களுக்குள் ஒரு பிரச்சனையாக வெடிக்கிறது. 

இந்த நிலையில், 'இறுகப்பற்று' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் எவ்வாறு உருவானது என்பதையும், அதில் நடிகை சானியாவின் நடிப்பு பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப்படத்தில் ஸ்ரீக்கு ஜோடியாக நடித்திருந்த சானியாவின் நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டது. அவரின் கதாபாத்திரம் குறித்தும்,  நடிப்பு குறித்தும் அந்தப்படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் ஹிந்துஸ்தான் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, 

'இயல்பாகவே பெண்கள அதிகமா ரசிக்க கூடியவன்தான். ஒரு ஆணா எனக்கு பெண்கள் மீது இரண்டு வித பார்வையுண்டு. அதில் பெண்களுக்கு நல்ல பக்கமும் உண்டு எதிர் பக்கமும் உண்டு.


அவற்றையெல்லாம் இந்த படத்துல காட்டி இருந்தோம். ஒரு டைரக்டரா, கதைக்குள்ள ரொம்ப ஆழமா போயி, அத உணர்ந்து, நடிகர்கள்கிட்ட அந்த மாதிரியான நடிப்பு வேணும்னு கேட்போம். நான் என்ன நினைச்சு கேட்டேனோ, அத திவ்யா கேரக்டர்ல நடிச்ச சானியா, அப்படியே செஞ்சு கொடுத்தாங்க.

அதன்படி, படத்தின் முக்கிய கட்டத்தில் திவ்யா அர்ஜூன்ட்ட விவாகரத்து கேட்பாங்க, ஆனா உண்மையா பார்த்தா அதுல அவங்களுக்கு விருப்பம் கிடையாது. இன்னொரு பக்கம், அத அர்ஜூன் ஏத்துக்கிட்டான் அப்படிங்கிறதுலையும் அவங்களுக்கு ஒரு ஷாக் இருக்கும்.

இந்த இரண்டு உணர்ச்சியையும் வெளிப்படுத்துற மாதிரி, அந்த இடத்துல ஒரு நடிப்பு தேவைப்பட்டுச்சு. அத சானியா சரியா புரிஞ்சிகிட்டு நடிச்சாங்க...அத்துடன், இப்படியான சூழ்நிலையில ஒரு பெண் எப்படி யோசிப்பா என டிஸ்கஸ் பண்ணிதான் அந்த கேரக்டர வடிவமைச்சோம்' என கூறியுள்ளார்.

Advertisement