• Jan 19 2025

பிக்பாஸில் கூனி குறுகி நிற்கும் பூர்ணிமா! புலம்பவிட்டு வேடிக்கை பார்க்கும் மாயா! வெளியான ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில், ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோவிகா, விசித்ரா, நிக்சன் ஆகியோர் விக்ரமை நாமினேஷன் செய்கின்றனர். அர்ச்சனா, பூர்ணிமா இருவரும் அனன்யாவுக்கு நாமினேஷன் செய்கின்றனர். அடுத்து அனன்யா, மாயா ஆகிய இருவரும் பூர்ணிமாவை நாமினேட் செய்கின்றனர். இவ்வாறு மாயா பூர்ணிமாவை நாமினேட் செய்ததோடு மட்டும் இல்லாமல், ஒன்னு நான் இருக்கனும் இல்ல அவங்க இருக்கணும் என சொல்லுகிறார்.


இந்த நிலையில், தற்போது வெளியான முன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா அழுது கொண்டு இருக்க, மாயா அவருக்கு ஆறுதல் சொல்வது போல காட்டப்படுகிறது. இவ்வாறு தற்போது பரிதாப நிலையில் பூர்ணிமா உள்ளார் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. இதோ வெளியான ப்ரோமோ...



Advertisement

Advertisement