• Feb 01 2026

இரண்டு பொண்டாடி சீரியல் வரிசையில் இணைந்த 'தமிழும் சரஸ்வதியும்' ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிய விஜய் டிவி!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். தற்போது குறித்த சீரியலில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

அதன்படி, விழா ஒன்றில் மேக்னாவுக்கு அவோட் கிடைக்கிறது. இதை தொடர்ந்து பேசிய மேக்னா, இந்த அவோர்ட் கிடைச்சதே தமிழால தான் என தமிழுக்கு கொடுக்கிறார்.

இதையடுத்து, மேக்னாவை பார்த்து பேசிய சீப் கெஸ்ட் ஒருவர், இந்த அவோர்ட் நீ வாங்கின என்பதை விட உன் அழகு வாங்கிக் கொடுத்து இருக்கு. அது உனக்கு பெரிய ப்ள்ஸ் பாயிண்ட் என சொல்லி கிளம்புகிறார்.


இதை கேட்ட மேக்னா அழ, சீப் கெஸ்டை கூப்பிட்ட தமிழ், உங்களைப்போல ஆட்களால தான் திறமையான நிறைய பெண்கள் வெளிச்சத்துக்கு வராம இருக்காங்க..நீங்க பாராட்டலாட்டி கூட பரவல..இப்படி பொறாமையால பேசாதைங்க என சொல்ல அவர் கோவமாக கிளம்பி போகிறார். இதை தொடர்ந்து, ஓடிவந்து தமிழை கட்டிப் பிடிக்கிறார் மேக்னா. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. ..

இவ்வாறான நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகமாக ஒருவருக்கு இரண்டு மனைவிகளின் கதையே அதிகமாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்த சீரியலும் இணைய போவதாக ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும், தமிழையும் சரஸ்வதியையும் பிரிச்சிடாதைங்க என குறிப்பிட்டு வருகின்றனர். எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த சீரியல் எவ்வாறு நகர போகின்றது என்பதை... 


Advertisement

Advertisement