• Dec 03 2024

மாயாவுக்கு நச்சுன்னு கிஸ் கொடுத்த பூர்ணிமா! எங்கு தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இரண்டு போட்டியாளர்களும் பரபரப்பாக பேசப்படும் நபர்களாக மாறிவிட்டனர்.

ஏனென்றால், பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி ரூல்ஸ் மீறும் நபர்களாக இவர்கள் உள்ளதோடு, அடுத்தவர்களை நொண்டிப் பார்ப்பதில் கை தேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கமலும், இவர்கள் செய்யும் குறிப்பாக மாயா செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதே இல்லை என்ற குற்றசாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.


இந்த நிலையில், தற்போது வெளியான வீடியோ ஒன்றில் பூர்ணிமா மாயாவுக்கு முத்தம் கொடுக்கிறார். அதுவும் கையை பிடித்து முத்தம் கொடுக்கிறார். தற்போது குறித்த வீடியோ கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த வீடியோவில் மாயாவின் கையை பிடித்து இருக்கும் பூர்ணிமா அவருக்கு முத்தம் கொடுக்க, இல்ல நீங்க கொடுத்துகோங்க நான் டெலிவெர்ட் பண்ணிடுவன் என மாயா சொல்லி சிரிக்கிறார்.

எது எப்படியோ, ஏற்கனவே மாயா- பூர்ணிமாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள் இனி என்ன செய்வார்கள் என சொல்லத் தேவை இல்லை.


Advertisement

Advertisement