• Jan 19 2025

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகனுக்கு அடித்த அதிஷ்டம்! சீரியல் பெயரே கிக் கொடுக்குதே..!!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி என்பன சீரியலுக்கு பெயர் போன சேனல்களாக காணப்படுகின்றன. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றன.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் 2, மகாநதி போன்ற சீரியல்கள் முன்னிலை வகித்து வருகின்றன.

அத்துடன் தற்போது புத்தம் புதியதாக ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி, மலர் விழும் பணிவனம் போன்ற சீரியல்களும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.  இந்த சீரியலில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தவர் தான் நவீன் வெற்றி. அவர் கார்த்திக் என்ற கேரக்டரில் தமிழும் சரஸ்வரியும் சீரியலில் நடித்து வந்தார்.


இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் 'கண்மணி அன்போடு' என்ற தொடரில் நவீன் வெற்றி நடிக்க உள்ளார். தற்போது இந்த தகவல்கள் வெளியாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

எனினும் இந்த சீரியலின் கதாநாயகி யார்? இதில் நடிக்கும் நடிகர்கள் யார் என்பது குறித்து எந்த தகவல்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement