• Jan 18 2025

'அரண்மனை 4’ படத்தில் தமன்னா, ராஷி கண்ணாவுக்கு சம்பளம் இத்தனை கோடியா? நயனை மிஞ்சிருவாங்களோ?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா உள்பட  சில நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு கூட விளம்பர நிகழ்ச்சிக்கு வராத நிலையில் தமன்னா எப்போதுமே தன்னுடைய படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக தவறாமல் வருவார் என்றும் ஆனால் அதே நேரத்தில் விளம்பர நிகழ்ச்சிக்கு வருவதற்காகவே சில லட்சங்கள் அவர் சம்பளமாக பெற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.



அதேபோல் ராஷி கண்ணாவுக்கு ’அரண்மனை 4’ படம் முக்கியம் என்பதால் அவரும் விளம்பர நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனால் தெலுங்கில் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்பதால் பணத்தை கூட எதிர்பாராமல் அவர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’அரண்மனை 4’ படத்தில் நடித்ததுக்காக தமன்னாவுக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது விளம்பர பணிகளுக்கும் லட்ச கணக்கில் வழங்கப்படுவதால் அவரது சம்பளம் நயன்தாராவின் சம்பளத்தை மிஞ்சிவிடும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் ராஷி கண்ணாவுக்கு இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அவர் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் ’அரண்மனை 4’ வெற்றி பெற்றால் தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் தமன்னா ஒரு சுற்று வருவார் என்றும் அதேபோல் ராஷி கண்ணாவுக்கு மார்க்கெட் உச்சத்துக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement