• Oct 04 2024

குழந்தையை மார்போடு அணைத்து தீபிகா எடுத்த ஸ்வீட் போட்டோ! இணையத்தில் வைரல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பாலிவுட் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் தீபிகா படுகோன். இவர் நடித்த படங்கள் அத்தனையுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவர் தமிழில் இவர் நடித்த கோச்சடையான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தீபிகா கடந்த பிப்ரவரி மாதம் தன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

டென்மார்க்கில் பிறந்த இவர் 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருந்தாலும் மனம் தளராத தீபிகா ஹிந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக தோன்றியதால் பலரும் தீபிகாவை ஆச்சரியமாக பார்த்தார்கள். அதுவும் சூப்பர் ஹிட் அடித்தது.


இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா துறையும் தீபிகாவை திரும்பி பார்த்தது. ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் ஐந்து படங்கள் வரை நடித்தார். எனினும் தமிழில் இவரால் நிலைத்து நிற்க முடியவில்லை கடைசியாக கல்கி படத்தில் நடித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணத்தினால் அவர்களுடைய குடும்பம் உச்சகட்ட மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது. மேலும் தீபிகாவுக்கும் ரன்வீருக்கும் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த  நிலையில், தீபிகா படுகோன் தன்னுடைய குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement