• May 20 2024

திடீரென பிரபல நடிகரின் படப்பிடிப்பிற்கு சென்ற சூர்யா- என்ன நடந்துச்சு தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் மாதவன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ‘. இப்படத்தில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளரான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இந்த ராகெட்ரி உருவாகியுள்ளது.

ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் ஜுலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் மாதவன் பல இடங்களுக்கு சென்று இப்படம் குறித்து பேசிவருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் இப்படம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வரும் மாதவன் இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சூர்யா மாதவனை பார்த்து கொடுத்த ரியாக்‌ஷன் வீடியோவை தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், நம்பி நாராயணனின் கதாபாத்திரத்திற்காக அவரை போலவே மாதவன் மாறியுள்ளதை சூர்யா பார்த்து வாயடைத்து நின்றுள்ளார்.அந்த வீடியோ ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement