• Jan 19 2025

அடுத்த படம் ‘ரோலக்ஸ்’ தான்.. உறுதி செய்த சூர்யா.. தரமான சம்பவம் இருக்குது..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்தகங்குவாபடத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில்ரோலக்ஸ்படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சூர்யா கூறியது தான் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்தவிக்ரம்திரைப்படத்தில் கடைசி பத்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து சூர்யா மிரட்டி இருப்பார் என்பதும் இந்த வரவேற்பை லோகேஷ் கனகராஜே எதிர்பார்க்காத நிலையில் தான் இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகரோலக்ஸ்என்ற தனி திரைப்படத்தையே அவர் இயக்க திட்டமிட்டு இருந்தார் என்பதும் அதற்கான திரைக்கதை எழுதும் பணியை அவர் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க இருக்கும்தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர்ரோலக்ஸ்படத்தை தான் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல்கங்குவாபடத்தை முடித்துள்ள சூர்யா அடுத்ததாகஅயலான்இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை முடித்தவுடன்ரோலக்ஸ்படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் நேற்றுகங்குவாபடத்தின் டீசர் ரிலீஸ் விழாவில் வருண் தவான்ரோலக்ஸ்படம் குறித்த கேள்வி எழுப்பியபோதுரோலக்ஸ்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனது அடுத்த படம் இதுதான் என்றும் சூர்யா பதில் அளித்தார். இதனை அடுத்துரோலக்ஸ்படம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அநேகமாக 2025 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement