• Mar 12 2025

இரு ஹீரோயினிகளுடன் நடிக்கவிருக்கும் சூர்யா...! படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தனது புதிய படத்திற்காக தயாராகி உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலைமையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ரெட்ரோ' படத்தை முடித்துள்ள சூர்யா அதனை மே 1ம் திகதி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளார். இதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்க இருக்கிறார்.


தற்பொழுது இந்த வரிசையில், வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா நடிக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் நிதிஅகர்வால் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

 

இவர்கள் இருவரும் கதையில் முக்கியமான பாத்திரங்களை ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால்,ரசிகர்கள் மத்தியில் படம் பற்றி அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சூர்யாவின் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் இந்தப் படமும் ரசிகர்களுக்குப் பிடித்த காணப்படும் என படக்குழு எதிர்பார்க்கின்றது.

Advertisement

Advertisement