• May 21 2024

சூர்யாவின் அடுத்த பிரம்மாண்டம் 1000 கோடி பட்ஜெட்டில்

sarmiya / 8 months ago

Advertisement

Listen News!

1997 ஆம் ஆண்டு முதல் நேருக்குநேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி  நந்தா, காக்க காக்க  ,பேரழகன் வேல், ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம்  ,பேரழகன்  போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த்  திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகி ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர்

தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சுதா கெங்கரா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பவர்,

இந்நிலையில்  டெல்லி 6, மிர்ஸ்யா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மேரா சூர்யாவை வைத்து பிரம்மாண்டமான படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரலாற்று படமாக உருவாக இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த  படத்தில் சூர்யா கர்ணன் கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். இரண்டு பாகங்களாக வெளிவர திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்திற்காக ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தொடங்க உள்ளது

Advertisement

Advertisement