• Sep 22 2023

லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்

stella / 4 days ago

Advertisement

Listen News!

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.கிரிக்கெட் பின்னணியில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க இந்த படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். 

மேலும், கபில் தேவும் கேமியோவாக நடித்துள்ளார்.திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்தார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகளை முடித்து வருகிறார்.


நடிகர் ரஜினிகாந்த் தனது போர்ஷன் டப்பிங்கை முடித்து விட்டதாக தற்போது வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், தனது காரில் கெத்தாக டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்து இறங்கும் ரஜினிகாந்த் “மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை.. மனித நேயத்தை அதுக்கு மேல வை.. அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” என கம்பீரமாக பேசும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement