சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படம் 2014 ஆம் ஆண்டு வெளியான போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. லிங்குசாமி இயக்கிய இந்தப் படம், பல ஆண்டுகள் கடந்த பிறகும் தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, படக்குழு எடுத்த முக்கியமான முடிவு தான் ரீ-எடிட் செய்யப்பட்ட பதிப்பை திரையிடல். நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தியேட்டர்களில் படம் மீண்டும் வெளியானது.

ரீ-ரிலீஸைப் பற்றிய ஆரம்ப அறிவிப்பே ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்தது. குறிப்பாக சூர்யாவின் காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் லிங்குசாமியின் இயக்கத்தை பெரிய திரையில் மறுமுறை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இப்புதிய ரீ-எடிட் பதிப்பில், 2014-இல் வெளியான பதிப்பில் இருந்த சில நீளமான காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. காட்சித் தொகுப்பு சீராக்கப்பட்டதால் படம் மேலும் சுறுசுறுப்பாக நகர்கிறது. சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், “இந்த பதிப்பு இன்னும் சிறப்பாக உள்ளது”என கருத்துரைத்துள்ளனர்.

படக்குழுவின் இந்த முடிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரீ-ரிலீஸ் படங்களுக்கு பொதுவாக வரும் வரவேற்பை விட ‘அஞ்சான்’ பெற்ற வரவேற்பு மிக அதிகம். படம் ரீ-ரிலீஸாகி முதல் இரண்டு நாட்களிலேயே கிட்டத்தட்ட ரூ.1 கோடியே 75 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!