• Aug 09 2026

மீண்டும் களைகட்டியதா விஜயா வீடு..? பொறாமையில் வெடித்த மனோஜ்.. பார்வதி சொன்ன அந்த வார்த்தை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து முழு பணத்தையும் கட்டி வீட்டை மீட்டுவிடுகிறார். அதன்பின் சிந்தாமணியிடம் முத்து, மீனா மற்றும் அண்ணாமலை ஆகியோர் உண்மையான உழைப்பின் தத்துவங்களைப் பற்றி கூறுகின்றனர். மேலும், இறுதியில் உண்மையே வெல்லும் என்றும் தெரிவிக்கின்றனர்.

அது மட்டும் இல்லாமல், மீனாவுக்கு நல்ல மனம் இருப்பதால்தான் கடவுள் கனவில் வந்து நீ செய்ய இருந்த சதி வேலையை காட்டிக் கொடுத்தார் என்ற உண்மையையும் அண்ணாமலை கூறுகிறார்.

முத்துவின் வக்கீலும் அங்கு வந்து, பைனான்சியரிடம் முத்து முழு பணத்தையும் கட்டியதற்கான ஆதாரங்களைத் திரட்டுகிறார். மேலும், வீட்டை அவர்களிடம் ஒப்படைத்ததோடு முத்துவைப் புகழ்ந்து பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து விஜயா, அண்ணாமலை என முழு குடும்பமும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கின்றனர். இதனால் விஜயா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அண்ணாமலையின் மீது சாய்ந்து அழுகிறார்.


இறுதியில் விஜயாவின் வீடு மீண்டும் களைகட்டுகிறது. வீட்டிற்கு அனைவரும் வந்து அவர்களை வாழ்த்துகின்றனர். அது மட்டும் இல்லாமல், அனைவரும் ஜோடி ஜோடியாக இருப்பதைப் பார்த்து மனோஜ் பொறாமைப்படுகிறார்.

மேலும், முத்துவைப் புகழ்ந்து பேசுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் பார்வதியும் முத்துவின் இந்த செயலை கதையாகக் கூற வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

பின்னர் விஜயாவிடம் சென்று, "என் மீது கோபமா?" என்று கேட்கிறார். அதற்கு விஜயா, "இல்லை. ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தபோதுதான் அவர்களைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தது" என்று கூறுகிறார்.

இதன்போது, "இந்த வீடு போனதற்கு காரணம் மனோஜ். ஆனால் வீட்டை மீட்டது முத்துதான். இப்போதாவது முத்துவைப் பற்றி சரியாக புரிந்துகொள்" என்று விஜயா கூறுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement