• Jun 05 2026

திரையரங்கில் தோல்வியா. ? ஆனால் ஓடிடியில் திடீரென வைரலாகும் ‘எஸ். சரஸ்வதி’.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பழிவாங்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘எஸ். சரஸ்வதி’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம், திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறாமல் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.

இதனை இயக்கியவர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இதன் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமானார்.

திரையரங்கில் வெற்றி கிடைக்காத நிலையிலும், தற்போது இந்த படம் ஓடிடி தளங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலில் Amazon Prime Video-இல் வெளியான இந்த திரைப்படம், தற்போது புதியதாக ETV Win தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படம் மீண்டும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கிஷோர், ராவ் ரமேஷ், ஜீவா, முரளி ஷர்மா மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இந்த படத்தை பூஜா சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இசையை இசையமைப்பாளர் தமன் வழங்கியுள்ளார்.

திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போதிலும், ஓடிடி வெளியீட்டின் மூலம் இந்த படம் புதிய ரசிகர்களை ஈர்க்கும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement

Advertisement