• Jun 04 2026

7-வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய 'பிளாஸ்ட்'... உலகளவில் மொத்தம் இத்தனை கோடி வசூலா.?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படத்தின் ஏழாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி வர்த்தக வட்டாரங்களின் தகவலின்படி, 'பிளாஸ்ட்' திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் இந்திய அளவில் ரூ.2.75 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. ஆறாவது நாளில் ரூ.3.45 கோடி வசூலித்திருந்த நிலையில், ஏழாவது நாளில் சுமார் 20 சதவீதம் அளவிற்கு வசூல் குறைந்துள்ளது.

இருப்பினும், இந்த சரிவு படத்தின் மொத்த வசூல் வேகத்தை பாதிக்கவில்லை. ஏழு நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.23.75 கோடி நிகர வசூலையும், ரூ.27.29 கோடி மொத்த வசூலையும் படம் பெற்றுள்ளது.

வெளிநாடுகளிலும் 'பிளாஸ்ட்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏழாவது நாளில் மட்டும் ரூ.50 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு வசூல் ரூ.7.30 கோடியை எட்டியுள்ளது. உலகளாவிய அளவில் படம் இதுவரை ரூ.34.59 கோடி மொத்த வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


படத்தின் அனைத்து மொழி பதிப்புகளிலும் தமிழ்ப் பதிப்பே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏழாவது நாளில் மட்டும் தமிழ்ப் பதிப்பு ரூ.2.50 கோடி நிகர வசூலை பெற்றுள்ளது. குறிப்பாக இரவுக் காட்சிகளில் ரசிகர்களின் வருகை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மாநில வாரியாக பார்க்கும்போது, தமிழ்நாடே படத்தின் முக்கிய சந்தையாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஏழாவது நாளில் ரூ.1.55 கோடி வசூல் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் ரூ.1.15 கோடி வசூல் கிடைத்துள்ளது.

வசூலைத் தாண்டி, சமூக வலைதளங்களிலும் 'பிளாஸ்ட்' திரைப்படம் குறித்து ரசிகர்கள் நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அர்ஜுனின் அதிரடி காட்சிகள், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைக்கதை, மற்றும் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


அத்துடன் "ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார். சிறந்த ஆக்‌ஷன், சிறந்த திரைக்கதை, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படம்" என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும், "நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் முழுமையாக ரசிக்கக்கூடிய ஒரு ஆக்‌ஷன் படம். அரங்கில் பெண்கள் உட்பட அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆக்‌ஷன் காட்சிகளை உற்சாகமாக ரசித்தனர்" என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மொத்தத்தில், பிளாஸ்ட் படம் தற்போது வசூலில் சிறிய சரிவை சந்தித்தாலும், ரசிகர்களின் ஆதரவும் நல்ல விமர்சனங்களும் காரணமாக இந்த திரைப்படம் தனது வெற்றிப் பயணத்தை நோக்கி தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement