தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வந்த விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக ஆட்சி அமைத்து செயற்பட்டு வருகின்றார் . யாரும் எதிர்பாராத விதத்தில் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சரானது இன்றளவில் மட்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகவே காணப்படுகின்றது
இன்னொரு பக்கம் விஜயின் அரசியல் பயணத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டு பேசப்பட்டு வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ளது. இதனால் அந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் அதனை மாபெரும் விருந்தாக கொண்டாடுவதற்கு தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
எனினும் நீண்ட காலமாக தணிக்கை சான்றிதழ் மற்றும் வெளியீட்டு தொடர்பான சிக்கல்களை சந்தித்து வரும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள புதிய முடிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் திரையுலகின் இறுதித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டதால் ‘ஜனநாயகன்’ மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் தணிக்கை அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் விஜய் அரசியலில் முழு கவனம் செலுத்தி தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றதும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தாமதமாகியதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, KVN தயாரிப்பு நிறுவனம் அவர்களிடம் பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் தனது தொழில்முறை பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!