நடிகர் சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமூக நீதி, நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் மக்களின் உரிமைகள் போன்ற அம்சங்களை வித்தியாசமான திரைக்கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வெளியான முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களை குவித்த 'கருப்பு', தற்போது உலகளவில் ரூ.300 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய வெற்றிப்படமாக 'கருப்பு' இணைந்துள்ளது.
இந்நிலையில், கருப்பு படத்தின் எடிட்டர் கலைவாணன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து அவர் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், கருப்பு படத்தின் கதையை பாதிக்கும் வகையில் எந்த பெரிய காட்சியும் நீக்கப்படவில்லை. சில கௌரவத் தோற்றங்கள் மற்றும் குறுகிய காட்சிகள் மட்டுமே இறுதி பதிப்பில் இடம்பெறவில்லை. மொத்தமாக பார்த்தால் அவற்றின் நேரம் 20 முதல் 30 நொடிகள் வரைதான் இருக்கும் என்றார்.

மேலும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சில பிரபல நடிகர்களின் காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் ஆர்யாவின் சிறப்பு தோற்றம், இரட்டை மருத்துவர் சகோதரர்கள் இடம்பெற்ற மெட்ரோ காட்சி மற்றும் 'தி கோட்' ஜீவா தோன்றிய காட்சி ஆகியவை இறுதி பதிப்பில் இடம்பெறவில்லை என கூறினார்.
இதில் ஆர்யா நடித்த காட்சியே நீக்கப்பட்டவற்றில் அதிக நேரம் கொண்டதாக இருந்ததாகவும், அந்த காட்சியை தனியாக 'Deleted Scene' ஆக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், திரையரங்குகளில் பார்க்க முடியாமல் போன அந்த காட்சியில் ஆர்யா எந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்? அவரது தோற்றம் கதையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
ஒருபுறம் 300 கோடி வசூல் சாதனையை கொண்டாடும் 'கருப்பு' படக்குழு, மறுபுறம் நீக்கப்பட்ட காட்சிகள் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தையும் மீண்டும் தூண்டியுள்ளது. குறிப்பாக ஆர்யாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!