தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக ஜொலித்து வருபவர் நடிகை திரிஷா இவருக்கு தற்போது 43 வயது ஆனபோதும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை குவித்து வருகின்றார்.
நடிகர் சூர்யா- த்ரிஷா நடிப்பில் இறுதியாக கருப்பு படம் வெளியானது இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி இருந்தார். நீண்ட நாட்களாக வெற்றி படம் கொடுக்க போராடிய சூர்யாவுக்கு இந்த படம் சிறந்த கம்பேக்காக அமைந்தது.
இந்த நிலையில், அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான சமீபத்திய பேட்டியில் நடிகை திரிஷா உடனான தனது நீண்டகால நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதன்படி பேட்டியொன்றில் பேசிய அர்ச்சனா கல்பாத்தி, திரைப்படத் துறைக்கு வெளியே தனக்கு இருக்கும் நெருங்கிய நண்பர் திரிஷாதான் என்று கூறியுள்ளார். பல ஆண்டுகளாக இருவரும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் அடங்கிய ஒரே நண்பர்கள் வட்டத்தைப் பகிர்ந்து கொள்வதாலும் இந்த நட்பு இன்னும் வலுவாக தொடர்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், திரிஷாதான் சினிமா துறைக்கு வெளியே எனக்கு இருக்கும் ஒரே நெருங்கிய தோழி. நாங்கள் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். பள்ளி, கல்லூரி நண்பர்கள் வரை ஒரே வட்டாரத்தில் இருப்பதால் எங்களுடைய நட்பு மிகவும் சிறப்பானது. அதனால்தான் இதுவரை நாங்கள் ஒன்றாக வேலை செய்யும் வாய்ப்பே அமையவில்லை என்று நினைக்கிறேன். அவர் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.. என்று அர்ச்சனா கூறியுள்ளார்.
மேலும் திரிஷாவைச் சுற்றி அடிக்கடி சமூக வலைதளங்களில் எழும் விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அர்ச்சனா, தங்களது நண்பர்கள் வட்டம் வெளிப்புற விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று தெரிவித்தார்.

அதன்படி, நாங்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம். எங்களுக்கென்று ஒரு உலகம் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுடைய இலக்குகள் என்னவோ அதில் கவனம் செலுத்தி முன்னேறிக்கொண்டே இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் திரிஷாவின் சினிமா பயணம் குறித்து பேசிய அர்ச்சனா, அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் இன்றளவும் அவரை முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே திரிஷா இந்த துறையில் இருந்தவர். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் மிகவும் கடினமாக உழைப்பவர். இப்போது வெளியாகி வெற்றி பெற்றுள்ள 'கருப்பு' படத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டும் அதிக வசூல் செய்த படங்களைப் பார்த்தால், அதில் திரிஷாவின் பெயர் கண்டிப்பாக இருக்கும். இந்த உயரத்தை அடைவது கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால்தான் சாத்தியம் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றியை ரசித்துக் கொண்டிருக்கும் திரிஷா, தொடர்ந்து பல புதிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!