• Dec 02 2025

அரோரா Male சப்போர்ட் இருந்தால் தான் விளையாடுவாங்க.! உண்மையை உடைத்த கெமி.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தைப் பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான திருப்பங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். தற்போது, சில போட்டியாளர்கள் வெளியேறியதால், வீட்டில் 15 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களின் சண்டைகளும், கலகலப்பும் பிக்பாஸ் ரசிகர்களை சற்று ஈர்த்துவந்துள்ளது.

இந்த போட்டியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய கெமி தற்பொழுது அரோரா குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகின்றது. 


அதாவது, "அரோரா இப்பதான் கொஞ்சம் விளையாடுறாங்க... அரோரா தனியா கேம் விளையாடினா விளையாட மாட்டாள். அவங்களுக்கு யாராவது ஒரு Male ஓட சப்போர்ட் தேவை. அதுவும், நான் நிறைய தடவை பார்த்திருக்கேன். அத்துடன் துஷார் இருந்தப்போ கொஞ்சம் விளையாடினாங்க. பிறகு துஷார் போன பிறகு காணோம். திரும்ப கம்ருதீன் வந்த பிறகு ஏதோ கொஞ்சம் விளையாடுறாங்க..." என்று கூறியுள்ளார் கெமி. 

இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கெமியின் கருத்துப்படி, அரோரா தனியாக விளையாடுவதில் கொஞ்சம் சிக்கல்படுகின்றார். Male போட்டியாளர் ஒருவரின் ஆதரவு இருந்தால் மட்டுமே அவர் நன்றாக விளையாடுவார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement