• Jun 04 2026

துக்க நிகழ்ச்சியில் கூட சர்ச்சையா.? இதனால் தான் அஜித் ஒதுங்கிக்கிறாரு! கூல் சுரேஷ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தவராகவும் கூல் சுரேஷ் திகழ்ந்து வருகின்றார். இவர் படங்களில் நடித்ததை விட திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு அதே கெட்டப்பில் வந்து ப்ரோமோஷன் செய்யும் காட்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.

அத்துடன் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் விடயங்கள் பற்றியும் அவர் தெரிவிக்கும் கருத்துக்களும் வைரலாகும். அவருடைய கருத்தை கேட்பதற்காக பல ஊடகங்களும் போட்டி போடுவதுண்டு.

இந்த நிலையில், லெஜெண்ட் ரசிகர் மன்றம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்ட விஜய்–த்ரிஷா விவகாரம் மற்றும் அஜித்தின் தாயார் மறைவிற்கு விஜயுடன் த்ரிஷா சென்ற விவகாரம் பற்றியும் கூல் சுரேஷ் கருத்து வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறுகையில், அஜித் சார் அம்மா மறைவுக்கு நடந்த துக்க நிகழ்ச்சிக்கு விஜய் சாரும், திரிஷா மேடமும் போயிருந்தாங்க. அது ஒரு துக்க நிகழ்ச்சி. அங்க போனதையே சில பேர் வேற மாதிரி திரிச்சு பேசுறாங்க. ஒரு நட்பை கொச்சைப்படுத்தாதீங்கயா.

விஜய் சாரும் திரிஷா மேடமும் ஏற்கனவே பல படங்களில் சேர்ந்து நடித்தவங்க. அந்த நட்பு முறையில்தான் போயிருக்காங்க. அதுல தேவையில்லாம கற்பனை கதைகள் பேசுறது தவறு.

கருப்பு படத்தோட ஆடியோ லாஞ்சுக்கும், பட நிகழ்ச்சிகளுக்கும் திரிஷா மேடம் சூர்யா சாரோட போனாங்க. அப்ப யாரும் பேசல. விஜய் சார் கூட போனதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனம்?

விஜய் சார் மேல மட்டும் ஏன் இந்த மாதிரி குறை சொல்றீங்க? பிடிக்கலன்னா ஒதுங்கி போயிடுங்க. ஒரு துக்க நிகழ்ச்சியில்கூட சர்ச்சை தேடாதீங்க.

இதனாலதான் அஜித் சார் பல தடவை, எங்க குடும்ப நிகழ்ச்சிகளுக்கு யாரும் வர வேண்டாம் என்று சொல்றாரு. துக்கத்தில் கூட சிலர் ஆதாயம் தேடுறாங்க. அதனால்தான் அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காரு.. என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சி கல்வி உதவிகளை மையமாகக் கொண்டிருந்தாலும், அஜித் - விஜய் - திரிஷா தொடர்பான சுரேஷின் கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement