• Jun 04 2026

முதல் காட்சியிலேயே பிளாக்பஸ்டர் சிக்னல்.? ராம் சரணின் 'பெத்தி' டுவிட்டர் விமர்சனம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ,இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான்-இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்த நிலையில், பெத்தி படம் வெளியான முதல் நாளிலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ராம் சரணின் தோற்றம், உடல் மொழி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அதன்படி ரசிகர்கள் கூறுகையில், 'இது வெறும் மாஸ் படம் மட்டுமல்ல, உணர்வுகளையும் வலுவாக பேசும் படம்' என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர், 'முதல் பாதி எந்த வேகத்தில் சென்றது என்பதே தெரியவில்லை' என பதிவிட்டுள்ளனர். மேலும், இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் பகுதிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கிய பின்னணி இசை மற்றும் பாடல்களும் படத்தின் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சில முக்கியமான காட்சிகளில் இசை மற்றும் காட்சிகள் ஒன்றாக இணைந்து திரையரங்கில் மிரட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.


சண்டைக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் ஒரு முக்கிய ஆக்‌ஷன் சீன் குறித்து ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர். 'அந்த ஒரே சண்டைக் காட்சிக்காகவே படம் பார்க்கலாம்' என்ற கருத்துகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


மொத்தத்தில், 'பெத்தி' திரைப்படத்திற்கு முதல் நாள் ரசிகர்களிடமிருந்து பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களே கிடைத்து வருவதால், படம் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. ராம் சரணின் சமீபத்திய படங்களில் மிக முக்கியமான படைப்பாக 'பெத்தி' அமையும் என ரசிகர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement