• Jun 05 2026

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age! ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!டீசர் இதோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரபலமான தொடரின் புதிய பாகமான ‘Ice Age: Boiling Point’ திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,  டிஸ்னியும் 20th சென்சுரி அனிமேஷனும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் 2027 பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய பாகத்தில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த மென்னி, சிட், டியாகோ ஆகிய கதாபாத்திரங்கள் மீண்டும் திரும்பியுள்ளன. அதோடு எல்லி, பக், ஸ்க்ராட் போன்ற ரசிகர்கள் விரும்பும் கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன.


இந்த முறை கதையின் மையம் இதுவரை ஆராயப்படாத Lost World எனப்படும் மர்ம உலகத்தைச் சுற்றி நகர்கிறது. எரிமலை வெடிப்புகள், கொதிக்கும் லாவா, நிலச்சரிவுகள் மற்றும் டைனோசர்கள் போன்ற ஆபத்துகள் நிறைந்த சூழலில் நண்பர்கள் குழு சிக்கிக் கொள்வதே கதையின் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டீசரில் காட்டப்பட்டுள்ள காட்சிகள், முந்தைய Ice Age படங்களை விட இந்த பாகம் அதிக அதிரடி மற்றும் சாகச அனுபவத்தை வழங்கும் என்பதை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement