• Jul 15 2025

"ரெட்ரோ " பட லாபத்தில் உதவி..! சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நடிப்பு மட்டுமன்றி நடிகர் சூர்யா பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகின்றார். சமீபத்தில் கூட அவர் குடும்பத்துடன் நடாத்தி வந்த அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தை மகிழ்ச்சியுடன் திறந்து வைத்தார். அந்த நிகழ்வின் போது அவர் தான் உழைக்கும் பணத்தில் மாத்திரமே இது இயங்குகின்றது என கூறி இருந்தார்.


இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வரும் "ரெட்ரோ " திரைப்படத்தின் லாபத்தினை தொடர்ந்து படக்குழு சார்பாக சிறிய பண உதவி ஒன்றினை செய்துள்ளார். கங்குவா தோல்வியை தொடர்ந்து சூர்யாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தற்போது இவர் படத்தின் லாபத்தில் ஒரு குறித்த தொகையினை வழங்கியுள்ளார். மேலும் அவர் ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement