தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும் எளிமையான மனிதநேய அணுகுமுறையாலும் ரசிகர்களின் மனதை வென்ற நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.
சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்து, இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அவர் திரையில் எவ்வளவு இயல்பாக நடிப்பாரோ, அதேபோல் வாழ்க்கையிலும் மனிதர்களை அணுகும் விதம் ரசிகர்களிடையே அவருக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளது.
விஜய் சேதுபதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரின் மகன் சூர்யா சேதுபதி சிறுவயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் சிந்துபாத் படத்திலும் நடித்தார்.
சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்த சூர்யா, சமீபத்தில் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் வரலட்சுமி சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியான பின் சூர்யாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பும், பாசிட்டிவான விமர்சனங்களும் கிடைத்தன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சூர்யா, அடிக்கடி தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், தனது தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவருடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கும் அவரது தாயாருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!