• Sep 20 2024

கம்பியொன்று தலையில் விழுந்திச்சு சூர்யா பதறிப்போய்ட்டாரு- சிங்கம் 2 திரைப்படத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்த ரகுமான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 90 காலகட்டத்தில் மிக சினிமா நடிகராக திகழ்ந்தவர் ரகுமான். இவர் நிலவே தந்தை என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதனை அடுத்து தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்தார்.இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.

 இந்நிலையில் சிங்கம் 2 படத்தில் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில் கூறியிருப்பது, என்னுடைய சினிமா கேரியரிலையே நல்ல படங்கள் வரிசையில் சிங்கம் 2 படத்திற்கு எப்பவும் ஒரு இடம் உண்டு. அந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. ஆரம்பத்தில் அந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டபோது நான் தயங்கினேன். பின் சிங்கம் படம் சக்சஸ் ஆதை அடுத்து சிங்கம் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்று தோன்றியது.


அதற்கு பிறகு தான் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் மூலம் தான் நான் ஹரி சாருடன் முதன் முதலாக வேலை செய்தேன். சாருடன் தான் படப்பிடிப்பு நடந்தது. அவரோட கடின உழைப்பை பார்த்து நான் பிரமித்து விட்டேன். இந்த படத்தில் அவர் அசுர வேகத்தில் உழைத்தார். தூத்துக்குடியில் அனல் பறக்கிற நேரத்தில் தான் இந்த படப்பிடிப்பு நடந்தது. அப்போதும் அவர் வேலை செய்வதை நினைத்து பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அந்தப் படத்தின் வெற்றிக்கு எல்லா கிரெடிட்டும் ஹரி சாருக்கு தான் கொடுக்கணும். கிளைமேக்ஸ் காட்சியில் சூர்யா உடன் மோதுவேன். என் தலைக்கு மேல் இரண்டு கம்பி வளையும் தொங்க விட்டிருந்தார்கள்.நான் அந்த கம்பி வளையத்தில் ஒரு கம்பியை மட்டும் பிடித்துக் கொண்டு ஆவேசமாக பேசிக் கொண்டிருப்பேன். 


அந்த கம்பி ரெண்டும் நிஜமாகவே கம்பி வளையங்கள். ஆனால், ரெண்டும் நடிக்கும் போது அதெல்லாம் நினைவுக்கு வரவில்லை. திடீரென்று இந்த கம்பியில் ஒன்று டங்கு என்று மண்டையில் வந்து மோதி விட்டது. பயங்கரமான வலி இருந்தாலும் காட்சி கண்டினியூட்டி விடாமல் நடித்து முடித்தேன். இதை பார்த்து ஹரி-சூர்யா சாருமே பதறிப் போய் விட்டார்கள். ஆனால், அந்த சீனை இன்றைக்கும் வரைக்கும் பாராட்டாதவர்களே இல்லை. மொத்தத்தில் சிங்கம் 2 படத்தை என்னால் மறக்கவே முடியாது என்று கூறினார்.


Advertisement

Advertisement