• Sep 19 2024

மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவரது படங்கள் ரிலீஸிற்கு முன்பே பெரும் தொகைக்கு  விற்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படமும் ரிலீசுக்கு முன்பே ரூ.80 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. 


மாவீரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளதால், அங்கும் இப்படத்தை ப்ரமோட் செய்ய தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். அதன்படி இன்று ஐதராபாத்திலும், நாளை கேரளா மற்றும் பெங்களூருவிலும் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அடுத்தபடியா வருகிற ஜூலை 10-ந் தேதி சென்னையில் இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது.


இந்நிலையில், மாவீரன் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் ரூ.25 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இதற்கு முன் நடித்த பிரின்ஸ் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். அப்படம் படுதோல்வி அடைந்ததன் காரணமாக மாவீரன் படத்துக்காக அவர் ரூ.5 கோடி சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Advertisement

Advertisement