• Jul 27 2024

கமல்ஹாசனுடன் மோத தயாராகிய சன்னிலியோன்? 5 வருடங்கள் கஷ்டப்பட்ட உலக நாயகனுக்கு சிக்கல்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மோத முடிவெடுத்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உலகநாயகன் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போது தான் ரிலீஸ்-க்கு தயாராகி உள்ளது. இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே தேதியில் தான் சன்னி லியோன் நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

சன்னிலியோன் நடித்த ’கொட்டேஷன் கேங்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ஜூலையில் வெளியாகும் என்று சன்னி லியோன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் ’இந்தியன் 2’வெளியாகும் அதே ஜூலை 12ஆம் தேதி வெளியாகுமா? அல்லது ஜூலை 20ஆம் தேதி வெளியாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஒருவேளை ஜூலை 12ஆம் தேதி வெளியிட ’கொட்டேஷன் கேங்’ படக்குழுவினர் முடிவு செய்தால் ’இந்தியன் 2’ படத்திற்கு போட்டியாக அமையுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement