• May 25 2026

டிக்கெட் புக் பண்ண யோசிக்கிறாங்களா மக்கள்? 'LiK' இதுவரையான வசூல் விபரம் என்ன தெரியுமா.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து “Love Today”, “Dragon” மற்றும் “Dude” போன்ற வெற்றிப்படங்களை வழங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “LiK”. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, லலித் குமார் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர்.

மேலும், இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் மற்றும் கௌரி ஜி. கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம், தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர் கதைக்களத்தையும் நடிப்பையும் பாராட்டினாலும், சிலர் திரைக்கதை மெதுவாக உள்ளது என்று விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், வெளியான மூன்று நாட்களில் “LiK” உலகளவில் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது. வார இறுதி மற்றும் அடுத்த வாரங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement