• Apr 14 2026

அடுத்தடுத்து விலகும் இயக்குநர்கள்... ரஜினி - கமல் படத்தில் நடப்பது என்ன?

shali / 1 day ago

Advertisement

Listen News!

ரஜினி மற்றும் கமல் இணையும் புதிய படத்திற்கு தற்காலிகமாக “தலைவர் 173” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் ஆரம்பத்தில் சுந்தர் C இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்குநராக இணைந்தார் என தகவல்கள் வெளியானது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்கும் எனவும் கூறப்பட்டது.


இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி சிபி சக்கரவர்த்தியும் இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் உருவாக்கிய கதையில் சில அம்சங்கள் தயாரிப்பு தரப்புடன் ஒத்துப்போகவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த பெரிய திட்டத்திற்கு அடுத்ததாக யார் இயக்குநராக வருவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையில், அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்க வாய்ப்பு பெற்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபியின் இடத்தை நிரப்ப அஸ்வத்தை தேர்வு செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement