ஜனநாயகன் திரைப்படம் விஜய், பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் அதன் வெளியீடு தாமதமாகியது.
இந்த தாமதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மேலும் அதிர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது. இந்த சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் தரப்பு இதை மிகவும் கவலைக்குரியதாகக் கருதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், “ஜனநாயகன்” படத்தை ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தயாரிப்பாளர் தரப்பில் விநியோகஸ்தர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அவர்கள் ஒத்துழைப்பு அளித்தால் அடுத்த கட்டமாக ஓடிடி தளங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரு தரப்பும் சம்மதித்தால், படம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Listen News!