• Apr 15 2026

ஆதியின் மோசடி வலை.. ஒவ்வொன்றாக சொல்லி அழுது புலம்பிய சின்ன மருமகள் நடிகை.! வைரல் வீடியோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை ஸ்வேதா. அவர் காதலித்துத் திருமணம் செய்த நிலையில் தற்போது அது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் ஆதி என்பவர் தான் ஸ்வேதாவின் கணவர் என கூறி வந்தார். ஆனாலும் ஸ்வேதா இதனை மறுத்தார். மேலும் "யாரும் இவரை நம்பி ஏமாற வேண்டாம், இவர் ஒரு மோசடிக்காரர்" என்று கூறினார்.

அதற்குப் பிறகு சின்ன மருமகள் சீரியலில் நடித்த தாமரைச்செல்வி, அவரிடம் மூன்று சவரன் நகை கொடுத்து ஏமாந்ததாக காணொளி ஒன்றை வெளியிட்டுப் பலருக்கும் தெரியப்படுத்தினார். ஆனாலும் ஆதி அதனை மறுத்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நடந்த முழு விவரத்தையும் சொல்லி அழுது புலம்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில்:


நான் 21 வயதாக இருக்கும்போது ஆதியை காதலித்தேன். அவருக்காக என்னுடைய குடும்பத்தை முழுவதுமாக விட்டுவிட்டு அவருடன் சென்றுவிட்டேன். நான் செய்த ஒரே தப்பு அது தான். அவரை அவ்வளவு நம்பினேன். அவருக்காக வீட்டை எதிர்த்தேன்.

ஆரம்பத்தில் அவருடன் வாழ்வதற்கு ஒரு இடம் இல்லாமல் வீதி வீதியாக அலைந்தேன். ஒரே ஆடையை பல நாட்கள் அணிந்திருக்கிறேன். எல்லாம் அவனுக்காகத்தான். எவ்வளவு வலிக்குது என்று சொல்ல வார்த்தைகளே இல்லை.

காதலித்தோம், திருமணம் செய்தோம் என்றாலும் சரியான முறையில் திருமணம் நடைபெறவில்லை. ரிஜிஸ்டர் திருமணம் கூட செய்யவில்லை. அவனுக்காக என் குடும்பம், நண்பர்கள், அப்பா, அம்மா, தம்பி எல்லாரையும் விட்டுவிட்டு போனேன்.

நான் மட்டும் வேலைக்குப் போய் சம்பாதித்து வீடு வாங்கி, பொருட்கள் வாங்கி ஒரு வாழ்க்கையை கட்டி எழுப்பினேன். அவன் எதுவுமே செய்யவில்லை. என்னுடைய கஷ்டத்தின் பலனை அவன் அனுபவித்தான். என்னை மட்டும் அல்ல, எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறான் என்று தெரியவந்த நாளே நான் வெளியே வந்துவிட்டேன்.

நீ யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறாயா? உனக்கு ஒரு நாள் உண்மை தெரியும். உன் அம்மாவையும் என் குடும்பத்தினர் போல நம்பினேன். என்னிடம் வந்து பேசினாயா? ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இனி யாரையும் இப்படி ஏமாற்றாதே" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement