தமிழ் சினிமாவில் வெளியான TN 2026 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த படம் விஜயை கேலி செய்வதாக விமர்சங்கள் எழுந்தாலும், அதற்கு படக்குழுவினர் உரிய விளக்கத்தை கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில், TN 2026 திரைப்படம் வெளியானதை முன்னிட்டு நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
என் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் TN 2026 திரைப்படத்தை கண்ணன் ரவி அவர்கள் தயாரித்துள்ளார்கள். இதற்கு முன்பு அவர்கள் தயாரித்த தலைவனின் தம்பி தலைமையில் படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இன்றைய அரசியல் சிக்கல்களையும் நிர்வாக சீர்கேடுகளையும் யாரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையோடு சொல்லும் படங்கள் இப்போது மிகவும் குறைந்துவிட்டன. அந்தக் குறையை போக்கும் வகையில் உமாபதி ராமையா இந்தப் படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார்.
நட்டி நடராஜ், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு ஆகியோரின் நடிப்பும், தர்புகா சிவாவின் இசையும், தம்பி முத்தையாவின் ஒளிப்பதிவும் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.

கண்ணன் ரவி ஐயா அவர்கள் தொழிலதிபராக இருந்தாலும், தமிழ் திரையுலகில் நல் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பேராவலோடு இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னுடைய மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.. என்று தெரிவித்துள்ளார்.
Listen News!