• May 05 2026

காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் ஜொலித்த ஜோதிகா — புத்தாண்டு போட்டோஷூட் வைரல்!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒன்றாக சூர்யா — ஜோதிகா ஜோடி திகழ்ந்து வருகிறது. இவர்கள் இருவரும் தங்களுடைய குடும்பத்தை கவனித்துக்கொண்டே நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். சூர்யா நடிப்பில் கருப்பு படம் தயாரிப்பில் உள்ளது.

சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக இணைந்து ஒரு ரசிகரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.

திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்த ஜோதிகா, பிள்ளைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வலுவான கதைகளைத் தேர்ந்தெடுத்தார். இவர் நடித்த 36 வயதினிலே, உடன்பிறப்பு, ஜாக்பாட் போன்ற படங்கள் கவனத்தை ஈர்த்தன.


இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவிலிருந்து விலகி தன்னுடைய கவனத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார். அதன்படி மாதவனுடன் இணைந்து நடித்த சாத்தான் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜோதிகா வெளியிட்ட வாழ்த்தும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

அதில் அவர் காஞ்சிபுரம் பட்டுப்புடவை உடுத்தி அழகான போட்டோஷூட் செய்துள்ளார். தற்போது அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement