பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா கோவிலில மயிலைப் பார்த்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா என்று கேட்கிறார். அதுக்கு மயில் அதெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறேன் என்கிறார். பின் மயில் தனக்கு தேவையான எல்லாத்தையும் தன்ர காசிலயே வாங்கிறேன் என்று சொன்னதைக் கேட்ட மீனா அப்படித் தான் இருக்கணும் என்று சொல்லுறார். அதனை அடுத்து செந்திலும் மீனா இருக்கிற கோவிலுக்குப் போய் நிற்கிறார்.
அங்க செந்தில் மீனா மயிலோட கதைச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்த்து கோபப்படுறார். பின் செந்தில் மீனாவைக் கூப்பிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்கிற என்று கேட்கிறார். மேலும், எத்தனை தடவை சொன்னாலும் அடங்கவே மாட்டியா என்று கோபப்படுறார். அதைக் கேட்ட மீனா எதுக்கு இப்ப கத்திட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

அதனை அடுத்து செந்தில் நீ யாருக்காக கோவிலுக்கு வந்தனீ என்றதை பார்த்திட்டேன் என்கிறார். அதைக் கேட்ட மீனா ஷாக் ஆகுறார். பின் மீனா வீட்டுக்கு போய் பேசலாம் என்று சொல்லிட்டு செந்திலைக் கூட்டிகொண்டு கிளம்புறார். மறுபக்கம் கதிர் முத்துவேலைப் பார்த்து இந்த வருத்தத்தை சரிபண்ணிடலாம் நீங்க பயப்பிடாதீங்க என்று சொல்லுறார்.
அதைத் தொடர்ந்து செந்தில் மீனா கிட்ட நீ எதுக்காக அவங்க கூட பேசுற என்று கேட்கிறார். மேலும் என்னோட குடும்பத்துக்கு எதிராக செய்திட்டு இருக்கிறத என்னால பார்த்துக்கொண்டு சும்மா இருக்கேலாது என்று சொல்லுறார். பின் செந்தில் வீட்டை விட்டு வெளியே கோபத்தோட கிளம்புறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!