• Jan 19 2025

சிவகார்த்திகேயன் குடும்பத்தில் ஒரு புதுவரவு.. என்ன குழந்தை தெரியுமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா மற்றும் குகன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமான நிலையில் அவருக்கு இன்று நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலகினர், சிவகார்த்திகேயனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குறித்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எங்களுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம், ஆராதனாவிற்கும் குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.



Advertisement

Advertisement